'மாநாடு' திரைப்படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் ’மன்மத லீலை’. இப்படத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அசோக் செல்வன், நாயகிகளில் ஒருவரான ரியா சுமன் நடித்திருந்த முத்தக்காட்சி மட்டுமே கிளிம்ப்ஸில் இடம்பெற்றது. யூ-ட்யூபில் வெளியாகும் காணொலிகளுக்கு சென்சார் இல்லாததை, இந்த முன்னோட்டம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.
மன்மத லீலை ரிலீஸ் தேதி போஸ்டர் முன்னதாக 'சின்ன வீடு' படத்தை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கல்யாணத்திற்குப் பிந்தைய காதலே கதைக்களம் எனவும் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 'மன்மத லீலை' திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸுக்கு இளைஞர்களிடையே ஏகபோக வரவேற்பு இருந்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதையும் படிங்க:இளசுகளை கிறங்கடிக்கும் இஞ்சி இடுப்பழகி சான்ரோமி. ஹாட் கிளிக்ஸ்