சென்னை: மங்காத்தா படத்தில் அஜித் கழுத்தில் போடப்பட்டிருக்கும் செயினின் பின்னணி கதையை விவரித்துள்ளார் அந்தப் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”ஹீரோவின் கழுத்தில் செயின் இருக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார். படத்தின் இறுதிக்காட்சியில் செயின் முக்கிய பங்கு வகிப்பதுடன், அதனை கழற்றி நெருப்பில் எறிவது போன்று காட்சியும் இருந்தது.
அப்போது ஹீரோ போலீஸாக இருப்பதால் கை விலங்கு போன்று செயின் இருந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தோம். அந்த வகையில் முதல் நாள் படப்பிடிப்பில் முதல் ஷாட் எடுப்பதற்கு முன்பு ஹீரோ கழுத்தில் தொங்கும் செயினை முடிவு செய்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.