தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சினிமாவில் பெண்கள் வலுவாக நிலைக்க முடியும் என்பதற்கு நயன்தாரா சான்று' - Latest tamil cinema news

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர், நடிகை நயன்தாராவின் அர்ப்பணிப்பு தனக்குப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Manju warrior says she likes the dedication of Nayanthara
Manju warrior says she likes the dedication of Nayanthara

By

Published : Jun 7, 2020, 6:13 AM IST

நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்றே அழைக்கப்படுவார். இவர் சமீபத்தில் நடிகை நயன்தாராவை பாராட்டிப் பேசியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பல ஆண்டுகளாக நயன்தாராவின் நடிப்பை தான் பார்த்து வந்ததாகவும்; சினிமாவில் அவரது அர்ப்பணிப்பு தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்குத் துறையில் பெண்கள் வலுவாக இருக்க முடியும் என்பதை நயன்தாரா நிரூபித்திருக்கிறார் என்றும் மஞ்சு வாரியர் குறிப்பிட்டார்.

தனக்கு நயன்தாராவைப் பிடிக்கும் என்றும்; அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தனக்கு நன்றாகத் தெரியும் எனவும் மஞ்சு வாரியர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details