மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர், தமிழில் தனுஷ் நடிப்பில் உருவான ’அசுரன்’ திரைப்படத்தில் பச்சையம்மாள் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், மஞ்சு வாரியர் மலையாளத்தில் இயக்குநர் சனல் குமார் சசிதரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'கைட்டம்' திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இதற்காக சனல் குமார் சசிதரன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழு இமாச்சலப் பிரேதசத்தில் தங்கி படப்பிடிப்பு நடத்திய போது அங்கு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மஞ்சு வாரியர் மற்றும் படக்குழுவினருடன் அங்கு சிக்கிக் கொண்டார். இதையடுத்து வெளியுறவு இணை அமைச்சர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோரின் துரித நடவடிக்கையால் படக்குழுவினர் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.