டூப் ஏதும் இல்லாமல் ஒரிஜினலாக ஃபைட் காட்சியில் நடித்த மஞ்சு வாரியருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருமண முறிவுக்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார், மலையாள நடிகை மஞ்சு வாரியர். கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'அசுரன்' படத்தில் தனுஷின் மனைவி பச்சையம்மாள் கேரக்டரில் நடிப்பில் வெளுத்து வாங்கினார்.
பல மலையாளப் படங்களில் கமிட்டாகியுள்ள மஞ்சு வாரியர் தற்போது பிஸியாக படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். 'சதுர்வேதம்' என்ற படத்தில் நடித்தபோது ஆக்ஷன் காட்சியில் டூப் இல்லாமல் ஒரிஜினலாக நடித்தார். பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களோடு நடித்தபோதிலும் யாரும் எதிர்பாராதவிதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது.