தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விநாயகன் ஜோடியாகிறார் மஞ்சு வாரியர்? - மஞ்சு வாரியர்

’பொது’ (pothu) என்னும் படத்துக்காக விநாயகனும் மஞ்சு வாரியரும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Manju - vinayagan

By

Published : Sep 10, 2019, 1:10 PM IST

Updated : Sep 10, 2019, 1:19 PM IST

அறிமுக இயக்குநர் சாஹிர் மஹ்மூத் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘பொது’. இதில் விநாயகனும் மஞ்சு வாரியரும் இணைந்து நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சித்திக், லால் உள்ளிட்ட பலரும் நடிக்கவிருக்கின்றனர். வெல்பான் இன்டர்நேஷனல் என்ற பேனரில் இந்தப் படத்தை ஜினு லோனா தயாரிக்கவுள்ளார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என கூறப்படுகிறது.

மஞ்சு வாரியர் தற்போது ரோஷன் ஆண்ட்ரியூ இயக்கிவரும் ‘பிரதி பூவன்கோழி’ படத்தில் நடித்துவருகிறார். அதேபோல் தமிழில் ‘அசுரன்’ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். பிரியதர்ஷனின் ‘மரக்கார்’, சந்தோஷ் சிவனின் ‘ஜாக் அண்ட் ஜில்’, சனல் குமார் சசிதரணின் ‘கையாட்டம்’ என மஞ்சு வரியாரின் படங்கள் வரிசையாக வெளியாகவுள்ளன.

கடைசியாக ‘தோட்டப்பன்’ படத்தில் நடித்திருந்த விநாயகனுக்கு அடுத்ததாக இயக்குநர் கமலின் ‘பிரணயமீனுகளுடே கடல்’ வெளியாகவுள்ளது. மேலும் கரிதண்டம், படா, டிரான்ஸ் ஆகிய படங்களிலும் விநாயகன் நடித்துள்ளார்.

விநாயகனும் மஞ்சு வாரியரும் இணைந்து பணிபுரிய உள்ளது மலையாள சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Sep 10, 2019, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details