தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உருவ கேலி செய்த ரசிகர் - பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன் - manjima slams netisan

மஞ்சிமா மோகன் தனது உருவத்தைக் கேலிசெய்த நபருக்கு தக்க பதிலடி கொடுக்கும்விதத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

உருவ கேலி செய்த ரசிகர் - பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்
உருவ கேலி செய்த ரசிகர் - பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்

By

Published : Mar 25, 2020, 3:12 PM IST

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அதற்குப் பிறகு தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ள இவர், தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக FIR என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது கரோனா வைரஸ் காரணமாகப் படப்பிடிப்புகள் அனைத்து ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் அதிக நேரம் தங்களது சமூக வலைதளங்கில் செலவு செய்துவருகின்றனர்.

அந்த வகையில் நடிகை மஞ்சுமா மோகன் கரோனா வைரஸ் குறித்து ரசிகர்களுக்கு ட்விட்டரில், "வீட்டில் இருப்பதில் மக்களுக்கு என்ன கஷ்டம் என்று எனக்குப் புரியவில்லை. வீட்டிலேயே இருங்கள்" என அறிவுரை வழங்கினார். அதற்கு இணையவாசி ஒருவர் மஞ்சுமா மோகனின் உருவத்தைக் கேலிசெய்யும் விதத்தில் பதிவு வெளியிட்டார். இதைக் கண்டு கடுப்பான மஞ்சிமா மோகன் அவருக்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், "இப்படியும் சில பேர் இருக்கிறார்கள். இது போன்ற ட்விட்களுக்கு நான் வழக்கமாகப் பதில் அளிக்க மாட்டேன். வீட்டில் இருங்கள் என கூறியதற்கு எனக்கு கிடைத்தது இதுதான். வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பது அவ்வளவு சுலபம் என நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு. எங்களுக்கு மட்டும் பணம் வானத்திலிருந்து கீழே விழுவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கரோனாவால் தள்ளிப்போன வொண்டர் வுமன் 1984 ரிலீஸ் தேதி!

ABOUT THE AUTHOR

...view details