தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகை மனிஷா யாதவுக்கு கரோனா - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகை மனிஷா யாதவ் தனது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மனிஷா
மனிஷா

By

Published : Apr 22, 2021, 1:46 AM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது ஆலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதில் திரையுலகினர் மட்டும் விதிவிலக்கு அல்ல. அந்த வகையில் வழக்கு எண் 18/9 படம் மூலம் அறிமுகமான மனிஷா யாதவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் நான் வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

மனிஷா யாதவ் வெளியிட்ட பதிவு

நான் வைரஸ் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வருவேன். எனக்குப் பெரிய அளவில் பிரச்னை எதுவும் இல்லை. மூச்சுத் திணறல் மட்டும் சில சமயங்களில் ஏற்படுகிறது. அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சல்மான்கானின் 'ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்' ட்ரெய்லர் நாளை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details