தமிழில் வெளியான 'படைவீரன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தனா. இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் தற்போது 'வானம் கொட்டட்டும்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார்.
பாசக்கிளிகளாக விக்ரம் பிரபு - ஐஸ்வர்யா ராஜேஷ் - 'வானம் கொட்டட்டும்' டீஸர் வெளியீடு - வானம் கொட்டட்டும் டீஸரை வெளியிட்ட தனுஷ்
விக்ரம் பிரபு - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான 'வானம் கொட்டட்டும்' திரைப்படத்தின் டீஸரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் இதனை தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாடகர் சித்ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் டீஸரை தனுஷ் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபு - ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கையாகவும், அவர்களது பெற்றோராக சரத்குமார் - ராதிகாவும் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமான ஃபேமிலி டிராமாவாக உருவாகியுள்ள 'வானம் கொட்டட்டும்' திரைப்படம் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகும் என டீஸரில் அறிவித்துள்ளனர்.