தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மணிரத்னத்தின் 'வானம் கொட்டடட்டும்' படப்பிடிப்பு ஆரம்பம் - வானம் கொட்டட்டும்

சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

vannam

By

Published : Jul 19, 2019, 10:25 PM IST

இயக்குநர் மணிரத்னம் ”செக்க சிவந்த வானம்” படத்தைத் தொடர்ந்து ’பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மணிரத்னம் 'வானம் கொட்டட்டும்' படத்தை தயாரிக்க உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

இயக்குநர் தனா இயக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் மற்றும் சாந்தனு ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக மணிரத்னம், தனாவுடன் இணைந்து கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் அறிமுகமாகிறார். இப்படத்தை 2020 இல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details