தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு நாளை தொடக்கம் - இயக்குநர் மணிரத்னம்

'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் (ஜன.06) ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்குகிறது.

maniratnams
maniratnams

By

Published : Jan 5, 2021, 9:47 PM IST

Updated : Jan 6, 2021, 3:29 PM IST

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்குகிறது. இதற்காக ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் ஹைதராபாத் வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கடும் கட்டுப்பாடு

ஹோட்டல் அறையிலிருந்து படப்பிடிப்புத் தளத்துக்கு வரவேண்டும், படப்பிடிப்பு முடிந்தவுடன் ஹோட்டல் அறைக்குச் செல்லவேண்டும், வேறெங்கும் பயணிக்கக் கூடாது என்று படக்குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிட்டால் பணிகள் அனைத்துமே முடித்துவிட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பொன்னியின் செல்வன்' படத்துக்காக ஐந்து பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தொடர்ச்சியாக 30 நாட்கள்வரை படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார் மணிரத்னம். திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெற்றால், இத்துடன் சுமார் 70% படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:எப்போதும் முதலிடத்தில் பொன்னியின் செல்வன்!

Last Updated : Jan 6, 2021, 3:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details