உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்திவரும் கரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக வெளிநாடுகளிலிருந்து, இந்தியா வரும் பயணிகள் குறைந்தது 14 நாள்களுக்குத் தங்களைத், தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மணிரத்னத்தின் மகன் நந்தன் கடந்த வாரம் லண்டனிலிருந்து, சென்னை வந்துள்ளார். இவருக்கு வைரஸ் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், நாடு திரும்பியதிலிருந்து தனியறையில் உள்ளார்.