தமிழில் வெளியான 'படைவீரன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தனா. இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் தற்போது 'வானம் கொட்டட்டும்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார்.
'வானம் கொட்டட்டும்' டைட்டில் லுக்கை வெளியிட்ட மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனம்! - வானம் கொட்டட்டும் டைட்டில்
இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் பாடகர் சித்ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இப்படத்தில் ராதிகா தனது டப்பிங் முடிந்துள்ளதாக சமூகவலைதளத்தில் தெரிவித்திருந்தார். தற்போது இப்படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீஸரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.