தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெளியானது மணிரத்னத்தின் 'நவரசா' டீசர்! - நவரசா டீசர்

சென்னை: நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்த 9 குறும்படங்களைக் கொண்ட 'நவரசா' திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

g
g

By

Published : Jul 9, 2021, 10:56 AM IST

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில், ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து ஒன்பது நவரசங்களை வைத்து 'நவரசா' என்னும் படத்தை இயக்கி வருகின்றனர்.

இந்தப் படத்தை பிரியதர்ஷன், வசந்த் சாய், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்தீரன் ஆர் பிரசாத், சர்ஜூன் ஆகிய ஒன்பது இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

கோபம், சிரிப்பு, வெறுப்பு உள்ளிட்ட 9 ரசங்களை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள 9 குறும்படங்களில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், யோகிபாபு, நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

தற்போது இந்தப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் நெட்ஃபிளிக்ஸில் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது. 9 குறும்படங்களுக்கு 'கிடார் கம்பி மேல நின்று', 'பாயாசம்', 'சம்மர் ஆஃப் 92', 'எதிரி', 'பீஸ்', 'ரெளத்திரம்', 'ப்ராஜெக்ட் அக்னி', 'இன்மை', 'துணிந்தபின்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன.

கரோனா பொது முடக்கம் காரணமாகத் திரையுலகில் ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்கு உதவுவதற்காக இந்தப் படத்தை எடுத்துவருகின்றனர்.

தற்போது இந்தப் படத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை வைத்து தமிழ்த் திரைத்துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு நல உதவிகளைத் தயாரிப்பு தரப்பினர் செய்ய இருக்கின்றனர்.

இதையும் படிங்க: கெளதம் மேனன்-சூர்யா படத்தில் உற்சாகம் அடைந்த பி.சி. ஸ்ரீராம்

ABOUT THE AUTHOR

...view details