தமிழில் சிம்புவின், 'மன்மதன்' படத்தில் நடித்தவர் மந்திரா பேடி. இவர் 1999ஆம் ஆண்டு ராஜ் கவுஷல் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ராஜ் கவுஷல் பாலிவுட்டில் ‘ஷாதி கா லட்டூ’ உள்ளிட்ட ஒரு சில படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் ராஜ் கவுஷல் இன்று (ஜூன் 30) காலை மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.