பாலாஜி மோகன் புதிதாக தொடங்கியுள்ள ஓபன் விண்டோ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார். ‘மண்டேலா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் முதன்மை தயாரிப்பாளராக உள்ளார்.
யோகி பாபுவின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஓபன் விண்டோ நிறுவனம் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கவுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
யோகிபாபு
’மண்டேலா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரம் கிசுகிசுக்கிறது. இப்படத்தில் சங்கிலி முருகன், ஜிஎம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார், உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.