விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் ரூ. 150 கோடி வசூலைத் தந்த நிலையில், இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய் வீட்டிற்கு வெடிகுண்டி மிரட்டல் விடுத்தவர் கைது! - விஜய்க்கு மிரட்டல்
விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் தமிழ்நாடு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் வசிக்கும் வீடு, இசிஆர் அருகே அமைந்துள்ள விஜய்யின் வீடு ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மிரட்டல் விடுத்த நபர் குறித்த விசாரணை தொடங்கப்பட்டது. தற்போது அந்த நபரைக் கண்டுபிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மணலியைச் சேர்ந்த அருண் (எ) மணிகண்டன் என்பவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது என விசாரணையில் தெரியவந்தது. தீபாவளியையொட்டி வெளியான விஜய்யின் ‘பிகில்’ படத்துக்கு ரசிகர்மன்ற டிக்கெட் கிடைக்காத விரக்தியில் இவ்வாறு செய்திருக்கிறார். அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.