சுமார் 65 வயதைக் கடந்துள்ளமலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மம்முட்டி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழித் திரைப்படங்களில் நடித்தும், என்றும் மாறாத இளமையுடனும் உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் மம்முட்டி! - Mammootty movies
நடிகர் மம்முட்டி ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
![ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் மம்முட்டி! Mammootty](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:13:17:1597671797-mammootty-new-look-viral-1708newsroom-1597671786-980.jpg)
Mammootty
அந்த வகையில், தான் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மம்முட்டி பகிர்ந்துள்ளார்.
அதில், “வீட்டில் வேலை, வீட்டு வேலை, வீட்டிலிருந்து வேலை, வேறு வேலை எதுவும் இல்லை, அதனால் வொர்க் அவுட்” எனப் பதிவிட்டுள்ளார். இன்றும் இளமை ததும்ப ஜொலிக்கும் மம்மூட்டியின் இந்தப் புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.