தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மம்மூக்காவிடம் 'பேரன்பு' காட்டிய ரசிகர்கள்...வருத்தப்பட்ட மம்மூக்கா! - பேரன்பு

தேசிய விருது கமிட்டி நடுவரிடம் நடிகர் மம்மூட்டி மன்னிப்புக் கோரிய சம்பம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

mamootty

By

Published : Aug 10, 2019, 7:02 PM IST

தேசிய திரைப்பட விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வழங்கிவருகிறது. அதன்படி 66ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் தில்லியில் நேற்று (ஆக்.9) அறிவிக்கப்பட்டன.

இந்த விருது பட்டியலில் மலையாள திரையுலகிற்கு ஏழு தேசிய விருதுகள் கிடைத்தன. ஆனாலும் மலையாள ரசிகர்களுக்கு ஒரு சின்ன ஏமாற்றம் இருந்தது. இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்திருந்த 'பேரன்பு' படத்துக்காக மம்மூட்டிக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை என்பதே அந்த ஏமாற்றம்.

இதனையடுத்து ரசிகர்கள் தேசிய விருது நடுவர் குழுத் தலைவர் ராகுல் ரவய்லின் ஃபேஸ்புக் பக்கத்துக்குச் சென்று தங்கள் குமுறல்களையும் கருத்துகளையும் பதிவு செய்தனர். விமர்சனங்கள் மோசமாக இருந்ததையடுத்து அவர், நடிகர் மம்மூட்டிக்கே கடிதம் எழுதிவிட்டார்.

மம்மூட்டிக்கு போஸ்ட் போட்ட ராகுல் ரவய்ல்

அதில், மம்மூட்டி, உங்களுடைய ரசிகர்களிடமிருந்து மோசமான கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறேன். 'பேரன்பு' படத்துக்காக உங்களுக்கு ஏன் சிறந்த நடிகருக்கான விருதைத் தரவில்லை என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.

நடுவர் தீர்ப்பைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அடுத்ததாக, நீங்கள் நடித்த 'பேரன்பு' படம் முதற்கட்ட குழுவால் நிராகரிப்பட்டது. அது மையக் குழுவின் பார்வைக்கே வரவில்லை. தோற்றுப்போய்விட்ட ஒன்றுக்காக உங்களுடைய ரசிகர்கள் சண்டையிடுவதை நிறுத்தச் சொல்லுங்கள். நடுவர் தீர்ப்பை எப்போதும் கேள்வி கேட்காதீர்கள் என்று எழுதியுள்ளார்.

இதற்கு மம்மூட்டி பதில் அளித்ததையும் தன்னுடைய ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ளார். மம்மூட்டி கூறியதாவது:

மம்மூட்டி பதில்

மன்னிக்கவும் சார். எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது. நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மலையாளம் - 7 தேசிய விருதுகள்

  • சிறந்த விமர்சகர்: பிளைஸ் ஜானி
  • சிறந்த திரைப்படப் புத்தகம் - மெளன ப்ரதான்போலே (எஸ். ஜெயச்சந்திரன் நாயர்)
  • நடுவர்களின் சிறப்பு விருது: ஜோஜூ ஜார்ஜ் (ஜோஸப்)
  • நடுவர்களின் சிறப்பு விருது: சாவித்ரி (சுடானி ஃப்ரம் நைஜீரியா)
  • சிறந்த மலையாளப் படம் - சுடானி ஃப்ரம் நைஜீரியா
  • சிறந்த கலை இயக்கம் - கம்மரா சம்பவம்
  • சிறந்த ஒளிப்பதிவாளர் - எம். ஜே. ராதாகிருஷ்ணன் (ஒலு) போன்ற விருதுகளை மலையாளத் திரையுலகம் தட்டிச்சென்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details