யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இப்படத்தின் மூலம் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி 4ஆவது முறையாக சீனு ராமசாமியுடன் கூட்டணி வைத்துள்ளார்.
மாமனிதன் படத்தின் முதல் பாடல் வெளியீடு - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
மாமனிதன்
இவருக்கு ஜோடியாக படத்தில் காயத்ரி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா, இளையராஜா இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர். இதனால் இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையில் இப்படத்தின் முதல் பாடலான ’தட்டிப்புட்டா’ என்ற பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.