கடந்த வருடம் கேரளா மாநிலத்தை உலுக்கி எடுத்த உயிர்கொல்லி வைரஸான நிபா வைரஸ் பாதிப்பை மையமாக கொண்டு இயக்குநர் ஆஷிக் அபு `வைரஸ்' படத்தை இயக்கியுள்ளார்.
நிபா வைரஸ் பரவியபோது நடந்த உண்மை நிகழ்வுகளை மையமாகக்கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஹ்மான், பார்வதி திருவொத்து, குஞ்சக்கோ போபன், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாறன், ஆசிஃப் அலி, சௌபின் ஷஹிர், பூர்ணிமா இந்திரஜித், ரம்யா நம்பீசன், மடோனா செபாஸ்டியன், ஜோஜு, திலீஷ் போத்தான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனார்.