தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெளியான டொவினோ தாமஸ்ஸின் திரில்லர் பட அப்டேட்! - திரில்லர் படம்

டொவினோ தாமஸ் நடித்துள்ள "கடைசி நொடிகள்" திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

malayalam movie remake in tamil  tamil dubbed movie  malayalam movie  cini update  Tovino Thomas latest movie  Tovino Thomas new movie  டொவினோ தாமஸ்  டொவினோ தாமஸ் புதிய படம்  கடைசி நொடிகள்  டொவினோ தாமஸின் கடைசி நொடிகள்  சினிமா செய்திகள்  திரில்லர் படம்  thriller movie
டொவினோ தாமஸ்

By

Published : Aug 29, 2021, 6:09 PM IST

கேரளாவில் முன்னதாக வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த ’ஃபாரன்சிக்’ திரைப்படம், ’கடைசி நொடிகள்’ எனும் பெயரில் உருவாகியுள்ளது. ரசி மீடியா மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடித்துள்ளார்.

வரிசையாக பெண் குழந்தைகள் கொலை செய்யப்படும் நிலையில், அந்தக் கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக காவல் துறையினர் ஒரு சிறப்பு படையை அமைக்கிறது.

அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். கொலைகளும் கொலை நடத்திய விதமும் ஒரே மாதிரி இருப்பதால் ஒரே கொலையாளி தான் இதை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் ஃபாரன்சிக் அலுவலர் துப்பறிகிறார்.

தான் அறிந்ததை காவலர்களிடம் கூறினால், அவர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர். பின்னர் அந்த காவலர்களை நம்ப வைத்து, அந்த கொலையாளியை எப்படி பிடிக்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை ஆகும்.

கடைசி நொடிகள்

ஹாலிவுட் தர உயர் தொழில்நுட்பம் மூலம் இப்படம் உருவாகியுள்ளது. விஸ்வசாந்தி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் கொலையாளியைக் கண்டறியும் பாரன்ஸிக் ஆபீஸராக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். மேலும் மம்தா மோகன் தாஸ், ரெபா மோனிகா, மோகன் சர்மா, பிரதாப் போத்தன் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக அகில் ஜார்ஜும், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜோயியும் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர். வசனம் ஏ.ஆர்.கே. ராஜராஜா. கோபிநாத், S.சந்திரசேகர் இணைந்து தயாரித்துள்ளனர். கதை, திரைக்கதை, இயக்கம் போன்றவற்றை அனஸ்கான் செய்துள்ளார்.

இதையும் படிங்க: பாகுபலி படத்துல வேம்புலி நடிச்சிருக்காரா... ரசிகர்கள் உற்சாகம்!

ABOUT THE AUTHOR

...view details