தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கேரள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார் - மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப்

கேரளாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் கோட்டயம் பிரதீப் இன்று(பிப்.17) மாரடைப்பால் காலமானார்.

கேரள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார்
கேரள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார்

By

Published : Feb 17, 2022, 12:14 PM IST

கோட்டயம்:கேரளாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் கோட்டயம் பிரதீப் இன்று(பிப்.17) மாரடைப்பால் காலமானார்.

கோட்டயம் இல்லத்தில் இருந்த அவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.

இவர் தனது நகைச்சுவை கதாபாத்திரங்களுக்காக பெயர்போனவர்.’ஈ நாடு இன்னாலெ வரே’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரதீப், அதன் பின்னர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்களான ’விண்ணைத் தாண்டி வருவாயா’,நண்பேண்டா’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:நம்ம வீட்டு செல்லப் பிள்ளை சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள்

ABOUT THE AUTHOR

...view details