மலையாளத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கன்யாகுமரியில் ஒரு கவிதா’. இப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அனில் முரளி.
இதுதவிர இவர் தமிழில் தனி ஒருவன், நிமிர்ந்து நில், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் இவர் கல்லீரல் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை30) இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அனில் முரளியின் இந்த திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில், மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு சுமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.