தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தளபதி' நடிகை...'தல' ஸ்டைலில் பைக் ரேஸ் - நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ - பைக் ஒட்டும் மாளவிகா

இந்தியாவின் சிறந்த பைக் ரைடர்ஸுடன் நடிகை மாளவிகா மோகனன் பைக் ஓட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

Malavika
Malavika

By

Published : Apr 21, 2020, 11:00 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் பூங்கொடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மாளவிகா மோகனன். 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு தங்கையாக வந்து ரசிகர் மனதில் இடம் பிடித்திருந்தார். அதைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழி படங்களில் நடித்திவருகிறார்.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேசிய ஊரடங்கால் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஃபர்முலா ஒன் டிராக்கில் கடந்தாண்டு பைக் ஓட்டிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார். அதில், "வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நமக்கு புதிய திறனை கற்றுக்கொள்வதற்கு ஒரு முயற்சியாக அமையும்.

பைக் ஓட்டும் மாளவிகா

கடந்தாண்டு ஜூன் மாதம் இந்தியாவின் தலைசிறந்த சில பைக் ரைடர்ஸுடன் ஃபர்முலா ஒன் ட்ராக்கில் நான் பைக் ஓட்டினேன். ஃபர்முலா ட்ராக்கின் முக்கிய சுற்றான புத்த சர்வதேச சுற்றில் நான் பைக் ஓட்டினேன். இது நிச்சயம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. என்னால் பைக் ரைடர்ஸின் வேக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. நான் மெதுவாகவே பைக் ஓட்டினேன்", என்று பதிவிட்டுள்ளார்.

ஓராண்டுக்குப் பின் மாளவிகா பதிவிட்ட இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தளபதி படத்தில் நடித்தாலும் தல போன்று பைக் ரைடில் ஆர்வம் இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details