சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’பேட்ட’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். அதைத்தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தற்போது ஷாகித் கபூர் நடிக்கவுள்ள வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் பிரைம் தயாரிக்கும் இத்திரைப்படம் அதிரடி கலந்த ஆக்ஷன் வெப் சீரிஸாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த வெப் சீரிஸின் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.