நடிகை மாளவிகா மோகனன் மாலத்தீவில் தனது விடுமுறையினை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். நீண்ட காலமாகவே பிரபலங்களின் வருகைகளால் பரபரப்பாக காணப்படும் விடுமுறை கொண்டாட்ட இடத்திலிருந்து புகைப்படங்களைப் பகிரும் வரிசையில் அவரும் இணைந்துள்ளார்.
மாளவிகா இன்ஸ்டாகிராமில் மூன்று படங்களின் தொகுப்பைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பல வண்ண கட்அவுட் மோனோகினியை அணிந்துள்ளார். அவர் தனது தோற்றத்திற்கு ஏற்றவாறு ஒரு மேலாடை, தங்கச் சங்கிலியைச் சேர்த்துள்ளார்.
அவரின் கணுக்காலில் இடம் பெற்றுள்ள சில வளையல்கள், மாளவிகாவின் அழகுக்கு மேலும் அழகுசேர்ப்பதாகவுள்ளன.
புகைப்படங்களைப் பகிர்ந்த மாளவிகா, "சேனலிங் மை இன்னர் ஸ்பிரிட் 🧜🏻♀️🌊🏝" எனப் பதிவிட்டுள்ளார்.
மாளவிகாவின் கடற்கரை ஒப்பனை தோற்றத்தை பிரபல ஒப்பனையாளர் ஷீஃபா கிலானி வடிவமைத்துள்ளார். விடுமுறை போட்டோஷூட்டிற்காக மாளவிகா நீச்சலுடை அணிந்திருந்தார்.
முன்னதாக மாளவிகா கடைசியாக பிளாக் பஸ்டர் தமிழ்த்திரைப்படமான மாஸ்டரில் நடித்திருந்தார்.
இதனையடுத்து ஹிந்தியில் சித்தாந்த் சதுர்வேதியுடன் இணைந்து 'யுத்ரா' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ரவி உத்யவார் இயக்கியுள்ள இத்திரைப்படம் ரொமான்டிக்-ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
ரித்தேஷ் சித்வானி மற்றும் ஃபர்ஹான் அக்தரின் எக்ஸெல் என்டர்டெயின்மென்ட் இதனை தயாரிக்கிறது. 'யுத்ரா' திரைப்படமானது வருகின்ற 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க:நிவின் பாலியுடன் இணைந்த சூரி!