தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாஸ்டர் படத்திற்காக ஆக்ஷனில் களமிறங்கிய மாளவிகா - மாளவிகா மோகனன் மாஸ்டர்

நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்திற்காக 'Parkor' என்ற ஆக்‌ஷன் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

malavika mohanan
malavika mohanan

By

Published : Jan 18, 2020, 2:28 PM IST

பேட்ட படத்தை தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன், தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்க, மாளவிகா கல்லூரி மாணவியாக நடித்துவருகிறார்.

இந்த நிலையில் பொதுவாக மாஸ் ஹீரோ படத்தில் நடிக்கும் நடிகைகள் வெறும் ரொமான்ஸ் செய்வதும், பாடலுக்கு நடனம் ஆடுவதும் என்று படத்தில் பெரும்பங்கை வகிப்பதில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் தற்போது அதை மாற்றும் வகையில் மாளவிகா, மாஸ்டர் படத்தில் 'parkor' என்ற ஆக்ஷன் பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறாராம். அது மட்டுமின்றி அப்படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியை எதிர்த்து, டூப் போடாமல் ஆக்ஷன் காட்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாளவிகாவின் இந்த உழைப்பு கண்டு, அவரது ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் விஜய் சேதுபதியுடன் மோதும் மாளவிகாவை திரையரங்கில் காண மிகவும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அடிமுறைப் பயிற்சி செய்யும் புன்னகை அரசி - வைரல் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details