'பேட்ட' திரைப்படத்தில் அறிமுகமாகி சொற்ப நாள்களிலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். படப்பிடிப்பின்போது தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்தும், விஜய் குறித்தும் மாளவிகா சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
'விஜய் யாரை பற்றியும் தவறாக பேசமாட்டார்' - அனுபவம் பகிர்ந்த மாளவிகா - விஜய் குறித்து அனுபவம் பகிர்ந்த மாளவிகா
'மாஸ்டர்' படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடனான அனுபவத்தையும் படப்பிடிப்பு குறித்த அனுபவத்தையும் நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
''மாஸ்டர்' வாய்ப்பு கிடைத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விஜய்யுடன் நடிக்க யாருக்குதான் விருப்பம் இருக்காது. படப்பிடிப்பின்போது தொடக்கத்தில் அவரும் மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் அவர் இனிமையான நபர். யாரும் அவரை எளிதில் அணுகமுடியும். இடையில் ப்ரேக் கிடைக்கும்போதெல்லாம் அவர் கேரவனுக்குள் போகமாட்டார். செட்டில் எங்களுடன் இருந்து ஜோக் அடித்துக்கொண்டு இருப்பார். அவர் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. முதல் நாள் படப்பிடிப்பில் விஜய்யுடனான ஷாட் ஒன்று எனக்கு இருந்தது. அது மிகவும் கடினமான காட்சி. முதல் நாளில் நடிக்க கடினமாய் இருந்தது. நடிக்க திணறிக்கொண்டிருந்தேன். ஆனால் நான் நன்றாக நடிக்கிறேன் என்று அவர் எனக்கு ஊக்கம் கொடுத்தார். அவரிடம் ஒரு நல்ல சக்தி இருந்தது. பிறரை குறித்து அவர் தவறாக பேசமாட்டார். நேர்மறை எண்ணங்கள் கொண்ட நபர்' என்றார்.
இதையும் படிங்க... 'மாளவிகாவுக்கு இந்த இயக்குநரைத்தான் பிடிக்குமாம்'