தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தள்ளிப்போகும் நோலனின் 'டெனட்' - ஏமாற்றத்தில் ரசிகர்கள் - இயக்கநர் கிறிஸ்டோபர் நோலன் டெனெட் ரிசீல் தேதி

மும்பை: பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெனட்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வரும் ஜூலை 31ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

TENET
TENET

By

Published : Jun 13, 2020, 5:14 PM IST

'பேட் மேன் தி டார்க் நைட்', 'இன்செப்ஷன்', 'இன்டர்ஸ்டெல்லார்', 'டன்கிரிக்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் அடுத்த படம் 'டெனட்'.

வார்னர் புரோஸ் தயாரிப்பில், ராபர்டின் பட்டிசன், ஜான் டேவிட் வாஷிங்டன் ஆகியோர் நடிப்பில், ஹான்ஸ் ஸிம்மர் இசையில் உருவாகியுள்ள இந்த ஸ்பை திரில்லர் உலகம் முழுவதும் வரும் ஜூலை 17ஆம் தேதி ரிலீசாக இருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 31ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக வார்னர் புரோஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெரைடி மெகசீனுக்குப் பேட்டியளித்திருந்த வார்னஸ் புரோஸ் பிக்சர்க் குழுமத்தின் தலைவர் டோபி எமிரிச், "கிறிஸ்டோபர் நோலனின் பிரமிக்க வைக்கும் 'டெனட்' திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதி ரிலீசாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிஸ்டோபர் நோலனின் மாஸ்டர்பீஸ் 'இன்செப்ஷன்' வெளியாகி வரும் ஜூலை 17ஆம் தேதியோடு பத்து ஆண்டு நிறைவடையவுள்ளது. ஆகையால் அவரைக் கௌரவிக்கும் பொருட்டு, ஜூலை 17ஆம் தேதியன்று அப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

இதுஒருபுறம் இருந்தாலும், 'டெனட்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன செய்தி கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க : 'கரோனா உள்ளவர்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டலாம்'

ABOUT THE AUTHOR

...view details