தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மா கா பா ஆனந்தின் பிளாக் பேர்டு ஆல்பம்! - பிளாக் பேர்டு இசை ஆல்பம்

சென்னை: மா கா பா ஆனந்த் நடிப்பில் உருவாகிய 'பிளாக் பேர்டு' (Black Bird) என்ற இசை ஆல்பம் வெளியாகியுள்ளது.

makapa
makapa

By

Published : Apr 23, 2021, 3:09 PM IST

வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மா கா பா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக் கொண்ட அவர், தற்போது 'பிளாக் பேர்டு' (Black Bird) என்னும் ஆல்பத்தில் நடித்துள்ளார். சாதாரண மனிதனை கருப்பு காக்கா ஒன்று துரத்துவதுபோல் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இசை ஆல்பம் போஸ்டர்

மேலும் தற்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு படமாக்கி இருக்கிறார்கள். இதில் மா கா பா ஆனந்த்துடன் பிரீத்தி நடித்துள்ளார். இந்த ஆல்பத்திற்கு பாடல் வரிகள் எழுதி விக்னேஷ் கார்த்திகேயன் இயக்கி இருக்கிறார். அரவிந்த் கிருஷ்ணன் இசையில் விஜய் கிருஷ்ணா பாடி இருக்கிறார். சிவசாரதி ஒளிப்பதிவு செய்ய, தீபன் குமார் படத்தொகுப்பு கவனிக்க ஜே.எப்.எல் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்த ஆல்பம் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details