தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரபல நடிகைக்கு கிடைத்த விருது... குவியும் பாராட்டுகள் - award for mahima nambiyar

ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 'மகாமுனி' படத்திற்காக நடிகை மஹிமா நம்பியாருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

mahima nambiyar got award for mahamuni filim  mahima nambiyar  மஹிமா நம்பியா  மஹிமா நம்பியாருக்கு விருது  மகாமுனி படத்திற்காக நடிகை மஹிமா நம்பியாருக்கு விருது  மகாமுனி  award for mahima nambiyar  mahamuni
மஹிமா நம்பியா

By

Published : Aug 29, 2021, 9:03 PM IST

சென்னை: சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் 2019ஆம் ஆண்டு 'மகாமுனி' படம் வெளியானது. இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை குவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மாட்ரிட் சர்வதேச விருது விழாவில் கலந்து கொண்ட இப்படம், 5 விருதுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மஹிமா நம்பியார்

விருது பெற்ற மஹி

அந்த வகையில் தற்போது சிறந்த துணை நடிகைக்கான விருது, நடிகை மஹிமா நம்பியாருக்கு கிடைத்துள்ளது. இப்படத்தில் தீபா என்கிற கதாபாத்திரத்தில் மஹிமா, தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

விருது பெற்ற மஹி...

இவ்விருதிற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் பங்கேற்றன. அதில் விருது பெற்ற ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமையை 'மகாமுனி' தமிழ் திரைப்படம் பெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, மஹிமா நம்பியார் நன்றி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மஹிமா நம்பியாருக்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: வெளியான டொவினோ தாமஸ்ஸின் திரில்லர் பட அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details