கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அலுவலகங்களும், கடைகளும் மூடப்பட்ட நிலையில், அனைத்து மொழி சினிமா படப்பிடிப்புகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக ஓய்வின்றி , கடிகாரத்தைப் போல் சுற்றித் திரிந்த பிரபலங்கள் தற்போது இதனால் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வீட்டில் முடங்கியுள்ள கதாநாயகிகள், சிறிய வீட்டு வேலைகள், சமையல், ஓவியங்கள் வரைவது போன்ற வேளைகளில் தங்களை ஈடுபடுத்திவருகின்றனர். அந்தவகையில் 'மாகமுனி' பட நடிகை மஹிமா நம்பியார் தற்போது தனது வீட்டில் உள்ள சுவரில் ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.