'மேயாத மான்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இதைத்தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள இவர் விஜய்யின் 'பிகில்' படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் பயிற்சியாளராக வரும் விஜய்யிடம் ஆரம்பத்திலிருந்தே லடாய் செய்யும் இவர் இறுதியில் நடிப்பில் கலக்கியிருப்பார்.
பிகில் ‘வேம்பு’வை திருமணம் செய்ய இரு நடிகைகள் போட்டி! - இந்துஜா கல்யாணம்
பிகில் படத்தில் வேம்புவாக தோன்றிய இந்துஜாவை திருமணம் செய்ய விரும்புவதாக இரண்டு இளம் நடிகைகள் போட்டிப் போட்டு கூறி வருகின்றனர்.
சமூகவலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது புதிய புதிய புகைப்படங்களை பதிவிட்டு வருவார். சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த மகிமா நம்பியார் இந்துஜாவிடம் நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா என கமெண்ட் செய்துள்ளார். இவரின் இந்த கமெண்டுக்கு பதிலளித்த இந்துஜா நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். இவர்கள் இப்படி கமெண்ட் செய்து கொண்டிருக்கையில் நடிகை அதுல்யா ரவி நான் ஏற்கனவே வெய்யிட் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இதற்கு மகிமா சரி அதுல்யா அதை இந்துஜாவே முடிவு செய்யட்டும். அவர் வேண்டாம் என்று சொன்னால் நான் உன்னை கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று மகிமா தெரிவித்துள்ளார்.
இவர்களின் இந்த கமெண்ட்களுக்கு நெட்டிசன்கள் வழக்கம் போல் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.