நடிகர் மகேஷ் பாபு தற்போது பரசுராம் இயக்கி வரும் 'சர்க்காரு வாரி பாட்டா' என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
”என்ன ஒரு எழுச்சியூட்டும் படம்!” - சூரரைப் போற்று குறித்து மகேஷ் பாபு - சூர்யாவின் சூரரைப்போற்று
சூர்யாவின் ’சூரரைப் போற்று’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ஒட்டுமொத்த படக்குழுவினரையும் நடிகர் மகேஷ் பாபு வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
Mahesh babu
சமீபத்தில் மகேஷ்பாபு தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இதற்கிடையில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினர் அனைவரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "'சூரரைப் போற்று' என்ன ஒரு எழுச்சியூட்டும் படம்! அருமையான இயக்கத்தால் சூர்யாவின் அற்புதமான நடிப்பு வெளிப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.