மகேஷ் பாபு நடிப்பில், கடைசியாக வெளியான திரைப்படம் 'சரிலேரு நீகேவரு' (Sarileru Neekevvaru). அனில் ரவிபுடி இயக்கத்தில் வெளியான இதில் ராஷ்மிகா, விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இதனைத் தொடர்ந்து மகேஷ் பாபு தற்போது தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த 'கீதா கோவிந்தம்' பட இயக்குநர் பரசுராம் இயக்கும் 'சர்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்துவருகிறார்.
சர்காருவில் கீர்த்தி சுரேஷும், வரலட்சுமி சரத்குமாரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். இவர்களுடன் வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தில் அனிருத் பாடல் பாடியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், மகேஷ் பாபுவின் பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட்.09) அதனை சிறப்பிக்கும் விதமாக படக்குழு நேற்றிரவு (ஆகஸ்ட்.08) 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. வழக்கம்போல் தெலுங்கு சினிமாவிற்கே உரித்தான பணியில் ஆக்ஷன் காட்சியில் மகேஷ் பாபு மாஸாக, ஸ்டைலாக உள்ளார்.
டீசர் வெளியான சில மணி நேரத்தில் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சித்தி விஜய நிர்மலாவின் சிலையை திறந்து வைத்த மகேஷ்பாபு