தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் மகேஷ் பாபு. இவருக்கு தமிழிலும் அதிகளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் மகேஷ் பாபுவிற்கு கால் முட்டியில் அடிபட்டிருப்பதாகவும், அதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மகேஷ் பாபு நடித்து வரும் சர்காரு வாரி பாட்டா (sarkaru vaari paata) திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிது ஓய்விற்குப் பின் மகேஷ் பாபு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:தனுஷின் வாத்தி படப்பிடிப்பு தொடக்கம்!