மகேஷ் பாபு நடிப்பில், கடைசியாக வெளியான திரைப்படம் 'சரிலேரு நீகேவரு' (Sarileru Neekevvaru). அனில் ரவிபுடி இயக்கத்தில் வெளியான இதில் ராஷ்மிகா, விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபு தற்போது தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த 'கீதா கோவிந்தம்' பட இயக்குநர் பரசுராம் இயக்கும் 'சர்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்துவருகிறார்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷும், வரலட்சுமி சரத்குமாரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தில் அனிருத் பாடல் பாடியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.