தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் கடந்தாண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் 'சரிலேரு நீகேவரு' (Sarileru Neekevvaru). அனில் ரவிபுடி இயக்கத்தில் வெளியான இதில் ராஷ்மிகா, விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சமீபத்தில் இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.
மகேஷ் பாபுடன் இணைந்த 'மகாநடி': படப்பிடிப்பு தொடக்கம்! - கீர்த்தி சுரேஷின் புதிப்படங்கள்
மகேஷ் பாபு - கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகவுள்ள புதியப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்த மகேஷ்பாபு சமீபத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த 'கீதா கோவிந்தம்' பட இயக்குநர் பரசுராம் இயக்கும் 'சர்காரு வாரி பாட்டா'(Sarkaru Vaari Paata) படத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. தமன் இசையமைக்கும் இந்தப்படத்தை மகேஷ்பாபுவின் சொந்த தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது. இப்படம் மகேஷ் பாபுவின் 27ஆவது படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 25) முதல் தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.