மங்காத்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மகத். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் சிம்புவின் தீவிர ரசிகரான இவர் சிம்புவின் நெருங்கிய நண்பராக வலம் வருகிறார். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-2 நிகழ்ச்சியின் கலந்துகொண்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
பிக்பாஸ் -2 வில் நடிகை யாஷிகா ஆனந்தும் மகத்தும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனால், மகத்தின் காதலியும் மாடல் அழகி பிராச்சி மிஸ்ரா மகத்தை பிரேக் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார்.