மங்காத்தா, ஜில்லா, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஹத். சில தினங்களுக்கு முன் இவருக்கும் இவரது நீண்டநாள் காதலி பிரஜி மிஸ்ராவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிரஜி மிஸ்ரா, ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2002 பட்டம் பெற்றவர். தற்போது இந்த நிச்சயதார்த்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் மஹத்.
நிச்சயதார்த்த வீடியோவை பகிர்ந்த மஹத்! - பிரஜி மிஸ்ரா
நடிகர் மஹத் தனது நிச்சயதார்த்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
![நிச்சயதார்த்த வீடியோவை பகிர்ந்த மஹத்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3372249-945-3372249-1558695169274.jpg)
Mahat
இது குறித்து அவர், "என் வாழ்வின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்னுடைய நிச்சயதார்த்தம் நடந்த நாள். உங்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு பார்வை" என்றார்.