தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிக்பாஸ் மகத்துக்கு வில்லனாகும் புதுமுகம்! - பிக்பாஸ்

'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' படத்தில் வில்லனாக நடிக்க புதுமுக நடிகர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகத்
மகத்

By

Published : Sep 2, 2021, 7:55 AM IST

பிக்பாஸ் பிரபலங்களான மகத், ஐஸ்வர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துவரும் திரைப்படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'. இதில் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடிக்கின்றனர்.

காதல் கலந்த காமெடியாக உருவாகும் இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மகத்துக்கு வில்லனாகும் புதுமுகம்

கதாநாயகன், வில்லன் இருவரும் ஒரே பெண்ணான ஐஸ்வர்யா தத்தா மீது காதலில் விழுகிறார்கள். இருவரில் நாயகி யாரை காதலித்து கரம் பிடிக்கிறார் என்பதே படத்தின் கதையாகும்.

இப்படத்தின் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மகத் இப்படம் தவீர இவன் தான் உத்தமன், காதல் condition apply ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details