இயக்குநர் பிரபு ராம் இயக்கத்தில் மஹத் நடிப்பில் உருவாகும் படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'. இந்தப் படத்தில் யோகிபாபு, ஐஸ்வர்யா, சாக்ஷி உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இதில் யோகி பாபு புதையலைத் தேடும் கடற்கொள்ளையனாக ப்ளாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மஹத்துடன் ப்ளாக் ஸ்பாரோவாக கலக்கும் யோகிபாபு! - யோகிபாபுவின் புதியப்படங்கள்
சென்னை: மஹத், யோகி பாபு நடிப்பில் உருவாகும் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
mahat
ஒரு ரிசாட்டிற்குள் நடக்கும் விஷயங்களை நகைச்சுவையுடன் கலாட்டாவாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீடு உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.