கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மகான்'. இத்திரைப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதைப்படி விக்ரம் கேங்ஸ்டராகவும், துருவ் விக்ரம் காவல்துறை அலுவலராகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திரைப்படத்திற்காக விக்ரம், துருவ் ஆகிய இருவரும் இணைந்து இன்று (டிச.3) டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளனர்.