தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யூ-ட்யூபில் சாதனை படைத்த 'மகான்' ட்ரெய்லர் - Vikram Mahaan Trailer

விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள மகான் படத்தின் ட்ரெய்லர், யூ-ட்யூபில் ஒரு கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

யூ - டியூபில் சாதனை படைத்த 'மகான்' ட்ரெய்லர்
யூ - டியூபில் சாதனை படைத்த 'மகான்' ட்ரெய்லர்

By

Published : Feb 5, 2022, 4:31 PM IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மகான்'. இதில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மகான் திரைப்படத்திற்கு ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சமீபத்தில் மகான் திரைப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்படட் 'மகான்' படத்தின் ட்ரெய்லர், யூ-ட்யூபில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'மகான்' திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க:கோவிட் தொற்று: பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடம்

ABOUT THE AUTHOR

...view details