தமிழ் சினிமாவில் பண்டிகை நாள்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். தொடர் விடுமுறை நாள்களில் வசூலை எளிதாக அள்ளிவிடலாம் என்பதற்காக படக்குழு பண்டிகை நாள்களை குறி வைத்து படத்தை வெளியிடுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படமும் சிம்புவின் மாநாடு படமும் மோதுகின்றன.
இந்நிலையில் விக்ரம் அவரது துருவ் விக்ரம் நடித்த 'மகான்' திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
மகனுடன் ரஜினியை எதிர்க்கும் சீயான் விக்ரம் - ரஜினி
ரஜினியின் அண்ணாத்த படத்துடன் விக்ரமின் மகான் திரைப்படம் தீபாவளி ரேஸில் மோதவுள்ளதாக கூறப்படுகிறது.
சீயான் விக்ரம்
முன்னதாக அஜித்தின் 'வலிமை' படமும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அப்படமும் பொங்கலுக்கு தள்ளிப்போனதால், மகான் படமும் தீபாவளிக்கு தள்ளிப்போகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா