தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விக்ரமின் மகான் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - mahaan movie amazon prime

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்துள்ள மகான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

mahaan movie release date
விக்ரமின் மகான் ரிலீஸ் தேதி அறிவிப்பு

By

Published : Jan 24, 2022, 4:01 PM IST

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மகான்'. இத்திரைப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 26ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

விக்ரமின் மகான் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கண்ணான கண்ணே ... டி.இமானுக்கு பிறந்த நாள் - ரசிகர்கள் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details