கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மகான்'. இத்திரைப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.