தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தளபதி 65' படத்தை இயக்கப் போவது 'மீகாமன்' மகிழ் திருமேனியா...?

விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

vijay

By

Published : Nov 13, 2019, 7:40 PM IST

விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் பிகில். இதில் ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரேவற்பை பெற்றது. தீபாவளிக்கு வெளியான இப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

இதனையடுத்து விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்புடன் நடைபெற்றுவருகிறது. இப்படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் 65 ஆவது படத்தை மீகாமன், தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜூன் மாதம் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிழ் திருமேனி தற்போது இயக்குநர் சக்தி சவுந்தராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே: ’தளபதி 64’ அப்டேட்: மாளவிகாவின் ஒரே போட்டோ... குஷியில் தளபதி ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details