தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சாந்தகுமாரின் ‘மகாமுனி’ : புதிய அப்டேட்! - ஆர்யா

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘மகாமுனி’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Magamuni

By

Published : Aug 25, 2019, 6:52 PM IST

’மௌன குரு’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் சாந்தகுமார். அதிகாரவர்க்கத்தின் கோர முகத்தை அப்பட்டமாகக் காட்டிய இத்திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல் இந்தியில் ‘அகிரா’ என்ற பெயரில் இதனை ஏ.ஆர். முருகதாஸ் ரீமேக் செய்தார்.

பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மௌன குரு’ படத்தைத் தந்த சாந்தகுமாரின் அடுத்து படைப்பு என்ன என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து ஆர்யா நடிப்பில் மகாமுனி என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார்.

மகாமுனி

சமீபத்தில் ‘மகாமுனி’ டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் இந்துஜா, மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details